Categories
தேசிய செய்திகள்

சிறுத்தை புலியுடன் சண்டையிட்ட வீரப்பெண்… தடியால் விரட்டிய மூதாட்டி… கூண்டு வைத்து பிடித்த போலீஸ்….!!!

மும்பையில் மூதாட்டியை தாக்கிய புலியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர்.

மும்பை ஆரே காலனி பகுதியில் வசித்து வரும் மூதாட்டி ஒருவர் நேற்று முன்தினம் அது வீட்டின் முன் பகுதியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது மூதாட்டியின் பின்புறமாக வந்த சிறுத்தைப்புலி திடீரென்று மூதாட்டியை தாக்கியது. சிறுத்தையை கண்டு சற்றும் அஞ்சாத மூதாட்டி தன் கையில் வைத்திருந்த தடியால் அதனை அடித்து விரட்டி உள்ளார். இதனால் மிரண்ட சிறுத்தைப்புலி அங்கிருந்து ஓடிவிட்டது. பின்னர் அவர் சத்தம் போட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்களை அழைத்துள்ளார் அதற்குள் சிறுத்தை புலி சென்றுவிட்டது.

இந்த சம்பவம் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டு அனைவராலும் பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆரே பகுதியில் மூன்று முறை சிறுத்தை புலிகள் மனிதர்களை தாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரே காலனி அருகே விலங்கின வாழிடமாக சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் இருந்து புலி தப்பி இருக்கலாம் என கருதப்படுகிறது. சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறையினர் 4 இடங்களில் கூண்டு வைத்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை சிறுத்தை பிடிபட்டது.

Categories

Tech |