Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சிறுநீரக கல்லடைப்பா? நிவாரணங்கள் இதோ…!!

சிறுநீரக கல்லடைப்பு நிவாரணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:

சிறுநீரில் கல்லடைப்பு உள்ளவர்கள் வாழைத்தண்டை, கூட்டு மற்றும் குழம்பு செய்து சாப்பிட்டாலோ, அல்லது பச்சையாக அதன் சாறை பிழிந்து தயிருடன் சேர்த்து பச்சடியாக செய்து சாப்பிட்டாலோ, உடலில் உள்ள விஷ பூச்சிகள் நீங்குவதுடன், மூத்திரப்பை கற்கள் நீங்கும்.

நெருஞ்சில் கல் குடிநீர் அல்லது நீர்முள்ளி குடிநீர், இவை கிட்னியில் இருக்கும் கல்லடைப்பை நீக்கும். அருகம்புல்லை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி அதனுடன் பால், சர்க்கரை சேர்த்து குடித்துவர சிறுநீர் சம்பந்தமான கல்லடைப்பு நீங்கும்.

திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர கல்லடைப்பு கட்டுப்படும்.
சோளத்தை இடித்து மாவாக்கி களியாகக் கிண்டி சாப்பிட்டு வர சிறுநீர் கல் அடைப்பு மற்றும் நீர்சுருக்கு, இருமல், கக்குவான் போன்ற நோய்கள் குணமாகும்.

மல்லிகைப் பூக்களை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேநீர் போல அருந்தி வந்தால் சிறுநீரகத்தில் ஏற்படும் கல்லடைப்பு முற்றிலும் குணமடையும்.

கற்பூரவள்ளி இலையை கசாயமிட்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர சிறுநீரக கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

Categories

Tech |