Categories
இந்திய சினிமா சினிமா

சிறுநீரக பாதிப்பால் பிரபல இந்தி நடிகர் மரணம்….. பெரும் சோகம்….!!!!

மும்பையில் வசித்து வரும் பிரபல சினிமா, டி.வி சீரியல் நடிகர் ரஷிக் தேவ் (64) சிறுநீரக பாதிப்பு காரண மாக சிகிச்சை பெற்று வந்த அவர், சில வருடங்களாக டயாலிசிஸ் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர்.

பல இந்தி, குஜராத்தி டி.வி தொடர்களில் ரஷிக் தேவ் நடித்துள்ளார். சன்ஸ்கர் கரோரன் அபனோன் கி, சிஐடி, கிருஷ்ணா உள்பட பிரபலமான டி.வி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுள்ளார். நடிகை கேதகி டேவை காதல் திருமணம் செய்த இவருக்கு ரித்தி, அபிஷேக் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

Categories

Tech |