ரயில் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் ரயில் நிலையத்திற்கு கூலி தொழிலாளியான லாசர் என்பவரும், அவரது சகோதரரும் வந்துள்ளனர். இந்நிலையில் லாசர் சிறுநீர் கழிப்பதற்காக தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது எக்ஸ்பிரஸ் ரயில் அவர் மீது பலமாக மோதிவிட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த நாகர்கோவில் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.