தமிழகத்தின் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாக செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் மற்றும் சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன்,கைவினை கலைஞர்களுக்கான கடன் மற்றும் கல்வி கடன் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. கைவினை காவலர்களுக்காக விராசத் கடன் என்ற திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குடும்ப ஆண்டு வருமானம், அவர் புறமாக இருந்தால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு உள்ளேயும், கிராமப்புறமாக இருந்தால் 98 ஆயிரத்திற்கு உள்ளும் இருக்க வேண்டும்.
திட்டம் இரண்டில் குடும்ப வருமானம் 8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். கைவினை கலைஞர்களுக்கு திட்டம் உன்னில் ஆண்களுக்கு 5% மற்றும் பெண்களுக்கு நான்கு சதவீதம் வட்டி விகிதத்தில் பத்து லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ, இஸ்லாமிய,முக்கிய மற்றும் ஜெயில் உள்ளிட்ட சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெற்று கடன் பெற விண்ணப்பிக்கலாம். ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வருமானச் சான்று உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 0421 2999130 என்ற எண்ணிலும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.