தமிழகத்தில் சிறுபான்மையின மாணவ மாணவிகள் கல்வி படிப்பை மேற்கொள்ள அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதன்படிசிறுபான்மை இன மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இது நடப்பு கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பிற்கான உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
அதனைப் போலவே 11 மற்றும் 12 ஆம் வகுப்பு, ஐடி ஐ, ஐடிசி, வாழ்க்கை தொழில் திறன், பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டய படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள் உள்ளிட்ட படிப்பை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி மேற்படிப்புக்காக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் பள்ளி மேற்படிப்புக்கான உதவித்தொகைக்கு அக்டோபர் மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.