தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022 – 23 ஆம் கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐஐடி, ஐடிசி, வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டய படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) படிப்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித் தொகையும் மற்றும் தொழிற்கல்வி தொழில்நுட்பக் கல்வி படிப்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தகுதியான மாணவ மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவி தொகை திட்டத்திற்கு 30 .9 .2022 வரையிலும் பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி வருவாய் அடிப்படையில் ஆன கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும் மேற்படி இணையதளத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கின்ற கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலையத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப்பங்களை இணையதளத்தில் சரி பார்க்க முடியும். இந்த நிலையில் புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகள் இணையதளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய யூ டி ஐ எஸ் இ, ஏ எஸ் ஹெச் இ, என் சி டி வி குறியீட்டு எண்ணை மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இந்த திட்டம் தொடர்பாக இந்திய அரசியல் வெளியிடப்பட்டிருக்கின்ற வழிகாட்டி நெறிமுறைகள் நெறிமுறைகள் http://www.minorityaffairs.gov.in/schems என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும் இந்த திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.