Categories
கல்வி

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கடந்த 2008-09 ஆம் ஆண்டிலிருந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 100% நிதியை ஒதுக்குகிறது. இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கான உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

இந்நிலையில் நடபாண்டிற்கான சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உதவி தொகைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த 1 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம், புத்தம், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சேர்ந்த மாணவர்கள் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |