Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமலையில் நடைபெற்ற கோவில் திருவிழா…. “நடிகர் சூரி பங்கேற்று நடனம்”….!!!!

சிறுமலையில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் நடிகர் சூரி கலந்துகொண்டு கிராம மக்களுடன் சேர்ந்து நடனமாடினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றார்கள். இத்திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தை சூரி நடித்து வருகின்ற நிலையில் சிறுமலைபுதூரில் சின்ன முத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறுவதையொட்டி அம்மன் மஞ்சள் நீராடும் நிகழ்ச்சியும் இதையடுத்து வாணவேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் பூஞ்சோலை சென்றடையும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனிடையே சூரி படப்பிடிப்பு முடிந்து அந்த வழியாக வந்தபொழுது திருவிழாவில் கலந்து கொண்டார். மேலும் கிராம மக்களுடன் சேர்ந்து நடனம் ஆடினார். இதனால் மகிழ்ச்சி மக்கள் அடைந்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

Categories

Tech |