சிறுமிகளுக்கு நடத்தப்படும் இரு விரல் பரிசோதனையை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்த முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த டைலர் ராஜீவ்காந்தி பாலியல் வழக்கில் சிறை தண்டனை பெற்று வருகிறார். இவர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு மருத்துவர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். போக்ஸோ சட்டத்தின்கீழ் பாதிக்கப்படும் சிறுமிகளுக்கு இந்த சோதனை நடத்தப்படுகிறது. இந்த சோதனை அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று கூறிய நீதிபதிகள், பல மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு இந்த பரிசோதனை நடத்துவதை தடை செய்துள்ளன என்று கருத்து தெரிவித்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிகளுக்கு நடத்தப்படும் இந்த இரு விரல் பரிசோதனை முறையை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.