Categories
உலக செய்திகள்

சிறுமிகளை வன்கொடுமையா…? இனி உங்கள் கதி அவ்ளோதான்…. விவாதத்திற்குரிய சட்டம்..!!

சிறுவர்களை துன்புறுத்தும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியா அரசாங்கம் இனி சிறுவர்களை துன்புறுத்துவதில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்று சர்ச்சைக்குரிய நெறிமுறையை அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய நெறிமுறைகளின்படி சிறுவர்களை துன்புறுத்தும் நபர்களுக்கு தண்டனை அளிக்கப்படும். பின் தண்டனை காலம் முடிந்தவுடன் ஆண்மை நீக்கம் செய்யலாமா? என்ற அடிப்படையில் நிபுணர்களின் குழு முடிவெடுக்கவுள்ளது. மேலும் அந்த குற்றவாளிகளின்  விடுதலைக்குப் பின்பு எலக்ட்ரானிக் சிப் ஒன்று அவர்கள் மேல் பொருத்தப்படும் அதாவது அவர்கள் செய்த குற்றத்திற்கான அடையாளம் வெளிப்படையாக தெரியப்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சிறுவர்கள் துன்புறுத்தப்படும் வழக்கில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என்ற சட்டத்திற்கு கடந்த 2016 ஆம் வருடம் இந்தோனேசியாவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன் பின்பு ஜனாதிபதி ஜோக்கோ விடாடோ இந்த புதிய நெறிமுறைகளை ஆதரவு கொடுத்துள்ளார். மேலும் சிறுவர்களை துன்புறுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் குற்றவாளிகளுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஆண்மை நீக்கம் செய்யப்படுவது சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்மை நீக்கத்திற்காக பயன்படுத்தப்படும் ஊசி மருந்துகளை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு எடுத்துக் கொள்ளாத பட்சத்தில் அதன் தாக்கம் சிறிது சிறிதாக குறைய தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |