தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் மீது ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து பத்திரிகை செய்திகளில் வெளிவருகின்றன. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் இன்னும் கொடூரமான முறையில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.