Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு உதவி செய்வது போல் நடித்து…. வாலிபர்கள் செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டில் தங்கி இருந்து இண்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல சிறுமி சைக்கிளில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். இவர் இண்டூர் பேருந்து நிறுத்தம் தாண்டி சென்ற போது திடீரென சாலையில் மயங்கி விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற சவுகத் மற்றும் குமரேசன் ஆகிய இருவரும் மாணவியின் முகத்தில் தண்ணீரை தெளித்தனர். ஆனால் மாணவி எழுந்திருக்காததால் இருவரும் அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக சென்ற மாணவியின் உறவினர் சத்தம் போட்டதால் இருவரும் அங்கிருந்து தம்பி ஓடினர். பின்னர் மாணவி பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது, உதவி செய்வது போல் நடித்து இரண்டு வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக மாணவி தெரிவித்தார். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் குமரேசன் மற்றும் சவுகத் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Categories

Tech |