Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை… 6 வருடங்களாக நடந்த வழக்கு… நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்புச்சிபாளையம் அருகே மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மணிகண்டன் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து சிறுமியை அழைத்து கொண்டு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் சிரம் கர்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் நியாயம் கேட்பதற்காக மணிகண்டனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் மணிகண்டனின் குடும்பத்தினர் அவர்களை மிரட்டி, தாகத வார்த்தைகளால் பேசி அனுப்பியுள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பரமத்திவேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மேலும் மணிகண்டனின் தந்தை பொன்னுசாமி, தாயார் லட்சுமி ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு நாமக்கல் மகளிர் நீதிமன்றத்தில் கடந்த 6 வருடங்களாக நடைபெற்று வந்துள்ள நிலையில் நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது. அதில் சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக மணிகண்டனுக்கு 20ஆண்டுகள் சிறை தண்டனையும், 10ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் மணிகண்டனை கோவை சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |