15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள ராமாயிபட்டியில் கோபி என்ற வாலிபர் வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்து கோபியை கைது செய்துள்ளனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.