கால்பந்து வீரர் ஒருவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொடர்புடைய புகைப்படங்களை அனுப்பி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டனில் பிர்மிங்காம் என்ற நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பான விசாரணையில் சைமன் பர்ச் என்ற வழக்கறிஞர் வாதாடியுள்ளளார். அதன்படி கடந்த 2018 ஆம் வருடத்தில் leroy Robinson (34) என்ற கால்பந்து வீரர் 14 வயது சிறுமி ஒருவருடன் நட்பை ஏற்படுத்தியுள்ளார். அதன்பிறகு சிறுமியுடன் பேசுவதற்காக தொலைபேசி எண்ணை பெற்றுக்கொண்டு அவருக்கு பாலியல் ரீதியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் அச்சிறுமியை பாலியல் தொடர்பான செயல்களை செய்யுமாறும் கூறி வந்துள்ளார்.
இதனைத்தொடந்து சிறுமி செல்போனை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சிறுமியின் தாயார் அவர் மீது சந்தேகம் அடைந்து தொலைபேசியை வாங்கி பார்த்துள்ளார். அதிலிருந்த புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் இந்த கால்பந்து வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட பின் நான் எந்த தவறான செயலையும் செய்யவில்லை என்று அவர் மறுத்து வந்துள்ளார். இதனையடுத்து சிறுமியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதில் அச்சிறுமி கூறியுள்ளதாவது, அவருடன் நட்பு ஏற்பட்டதை நினைத்து வேதனைப்படுகிறேன். மேலும் கடும் சங்கடத்திற்கு உள்ளானேன் என்றார். மேலும் எனக்கு ஏற்பட்ட இந்த பாதிப்புகள் காரணமாக மிகுந்த பதற்றம் அடைந்துள்ளதாகவும் அமைதியாக தூங்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் Robinson குற்றத்தை ஒப்புக் கொண்டதனால் 40 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.