சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த சித்த மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர் சிறுமியை யாரோ பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறி உள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது சிறுமி எம்ஜிஆர் நகரில் சித்த மருத்துவமனை நடத்தி வரும் மருத்துவர் பாலசுப்பிரமணியன் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி சிறுமி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுப்பிரமணியனை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.