Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கருக்கலைப்பு…. 5 நபர்களின் கொடூர செயல்…. போலீஸ் விசாரணை…!!

கருக்கலைப்பு செய்ததால் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி பகுதியில் பெற்றோரை இழந்த 16 வயது சிறுமி உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். அந்த சிறுமியை அதே பகுதியில் வசிக்கும் போலீஸ்காரர் மற்றும் அவரது தம்பி உள்பட 5 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த 5 பேரும் சிறுமியின் கருவை கலைக்க நர்ஸ் ஒருவரிடம் பேசி பணம் கொடுத்துள்ளனர். அதன்படி அந்த நர்ஸ் கருவை கலைக்க ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏற்பாடு செய்துள்ளார். இதனை அடுத்து கருக்கலைப்பு செய்த சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இதனால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சிறுமையை அனுப்பி வைத்தனர். இது குறித்து அறிந்த அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் படி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் போலீஸ்காரரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் நடவடிக்கை எடுக்க தாமதம் செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |