Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த குற்றத்திற்காக காவல்துறையினர்  கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும்  16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர்  கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்  ஜெயராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |