Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தொழிலாளி செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த கூலி தொழிலாளிக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒதியத்தூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ரஜினி ராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ரஜினி ராஜன் 12 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ரஜினி ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் ரஜினி ராஜனுக்கு 5 வருடங்கள் ஜெயில் தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |