Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. திருமணத்திற்கு மறுத்த கல்லூரி மாணவர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அருகில் இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் 19 வயதுடைய கல்லூரி மாணவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் சிறுமி தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனையடுத்து வாலிபர் சிறுமியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி மாணவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |