Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!

சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் கூலித் தொழிலாளியான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த டிசம்பர் மாதம் யாருக்கும் தெரியாமல் அப்பகுதியில் இருக்கும் கோவிலில் வைத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு வாடகைக்கு வீடு எடுத்து சுரேஷ் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருக்கிறார்.

இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி கிணத்துக்கடவு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்து பார்த்த போது அவருக்கு 17 வயது தான் ஆகிறது என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக சுரேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Categories

Tech |