சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு சிறுமியின் தாயார் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அதே பகுதியில் வசிக்கும் கருணாகரன் என்பவர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருணாகரனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கருணாகரனுக்கு 36 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆயுள் சிறை தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.