சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்து குற்றத்திற்காக கல்லூரி மாணவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்திலுள்ள வயலூர் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பிரபு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.