Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. லாரி ஓட்டுநர் செய்த செயல்….. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள செட்டிமாரம்பட்டி பகுதியில் லாரி ஓட்டுநரான பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் பிரபாகரனை கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பிரபாகரனுக்கு 1000 ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |