சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த போலீஸ்காரர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலத்தில் வசிக்கும் ராணுவ வீரருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். கருத்து வேறுபாடு காரணமாக ராணுவ வீரர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் ராணுவ வீரரின் ஒரு மகளுக்கு மேலூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் காளிராஜ் என்பவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இது குறித்து சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராணுவ வீரர் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் காளிராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.