சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாட்டு வியாபாரிக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூரில் தாமரைச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாடு வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் தாமரைச்செல்வன் சிங்கம்புணரியில் இருக்கும் மாடு வியாபாரியின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த வியாபாரியின் வீட்டில் இருந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி தாமரைச்செல்வன் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தாமரைச் செல்வனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தாமரை செல்வனுக்கு ஆயுள் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3,50000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.