சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர்களை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் 13 வயது சிறுமி தனது அண்ணனுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு அவரது அண்ணனின் 5 நண்பர்கள் இணைந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக ஆவடி போலீஸ் கமிஷனருக்கு புகார் வந்துள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட குழந்தை நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ஐந்து வாலிபர்கள் இணைந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை பிடிக்குமாறு ஆவடி கமிஷனர் சந்தீப் ராய் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி செங்குன்றம் பகுதியில் பதுங்கி இருந்த அப்துல், பாபு, அக்பர், லட்சுமணன், கௌதம் ஆகிய 5 பேரையும் அம்பத்தூர் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.