சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள புதூர் பகுதியில் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த முதியவர் அப்பகுதியில் இருக்கும் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி அலறி சத்தம் போட்டதால் முதியவர் அங்கிருந்து சென்றுவிட்டார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த பெற்றோரிடம் சிறுமி தனக்கு நடந்தவற்றை தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முதியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.