சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் பொன்ராஜை கைது செய்தனர்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி பொன்ராஜை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சிறையில் இருக்கும் பொன்ராஜுக்கு சிறை அலுவலர்கள் வழங்கியுள்ளனர்.