சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் ஜெயலலிதா விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வள்ளியூர் கடம்பகுளம் பகுதியில் கூலித் தொழிலாளியான பூவையா(68) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு முதியவர் அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் வள்ளியூர் அனைத்தும் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் பூவையாவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் முதியவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.