சிறுமியை திருமணம் செய்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள காட்டூர் மேல தெருவில் குமார்(44) என்பவர் வசித்து வருகிறார். இவர் 17 வயது சிறுமியை தஞ்சை அருகே இருக்கும் மில் வேலைக்கு அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதனை அடுத்து ஆறுமுகம்(40) என்பவர் சிறுமியை திருமணம் செய்துள்ளார். பின்னர் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்த ஆறுமுகம் சிறுமியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இதனை அடுத்து பெற்றோர் தங்களது மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது. இது குறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக ஆறுமுகத்தை கைது செய்தனர். மேலும் சிறுமியை கர்ப்பமாகிய குற்றத்திற்காக குமாரை கைது செய்தனர்.