சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியை அவரது பெற்றோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல்துறையினர் சிறுமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் சிறுமலையில் வசிக்கும் கூலித்தொழிலாளியான மணி என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் மணியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் மணிக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்ததோடு, 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.