சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் சமத்துவபுரம் நேதாஜி நகரில் அய்யனார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருள்(22) என்ற மகன் உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை அருள் திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் அருளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.