விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் கூலித் தொழிலாளியான சதீஷ்குமார்(24) என்பவரை வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு சதீஷ்குமார் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈடாக வழங்கவும் பரிந்துரை செய்துள்ளனர்.