கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமியும் 17 வயதுடைய கல்லூரி மாணவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவர் தனது வீட்டில் வைத்து சிறுமையை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளார். இதனையடுத்து அவர் சிறுமியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவரை எச்சரித்து அனுப்புமாறு கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவர் விதிமுறைகளை மீறி சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் 17 வயது கல்லூரி மாணவரை கைது செய்து கோவையில் இருக்கும் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் சிறுமியை மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் சேர்த்தனர்.