Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நேர்ந்த கொடுமை…. அதிகாரி கொடுத்த புகார்…. போலீஸ் விசாரணை….!!

சிறுமியை  திருமணம் செய்த வாலிபர் உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது  செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 8-ஆம்  வகுப்பு படிக்கும் சிறுமி  தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் திருப்பூரை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்கும் கடந்த 4-ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து சமூக நலத்துறை அதிகாரி ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் சிறுமியின்  பெற்றோர் சம்மதத்துடன்  இந்த  திருமணம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் முத்துராமலிங்கம்  உள்ளிட்ட 5 பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |