Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தாயின் 2-வது கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் 40 வயதுடைய பெண் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் பேராசிரியையின் கணவர் இறந்துவிட்டார். கடந்த 2014- ஆம் ஆண்டு மருந்து விற்பனை பிரதிநிதியை பேராசிரியர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

அவர் தனது 2 மனைவிகளுடனும் வாழ்ந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியையின் 2-வது மகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேராசிரியர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் பேராசிரியரின் 2-வது கணவரை கைது செய்தனர்.

Categories

Tech |