Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு…. தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல் பகுதியில் செல்வராஜ்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரியின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் செல்வராஜை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சத்யா, செல்வராஜுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 வருடங்கள் ஜெயில் தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு 1 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |