Categories
தேசிய செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை – மக்கள் தீர்ப்பு இது தான்

திருப்பதியில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.

திருப்பதி பத்ம நகரில் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முனீஸ் பாஷா என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் மிரண்டு சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுனரிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுனர் முனீஸ் பாஷாவுக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் முனீஸ் பாஷாவை பொதுமக்களிடம் இருந்து மீட்டு கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |