சிறுமிக்கு வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கொடுத்து சேலம் கோர்ட்டு உத்தரவியிட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகிலுள்ள வெள்ளரிவெள்ளி சுண்ணாம்புக்காரன் காட்டு வளவு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியனின் 20 வயது உடைய மகன் பிரசாத். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பெற்றோர்கள் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து பிரசாத்தை கைது செய்த்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து நடந்து வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதன் படி குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் அளித்து நீதிபதி முருகானந்தம் உத்தரவிட்டார்.