மதுரையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராணுவ வீரர் உட்பட இருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு மதுரை செக்கானூரணி பகுதியில் ராணுவ வீரர் மோகன் பிரகாஷ் மற்றும் அவரின் நண்பர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் இருவரும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடந்த 7 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில், தற்போது ராணுவ வீரர் மற்றும் அவரின் நண்பர் இருவருக்கும் 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.