சிறுமியை கர்ப்பிணியாக்கிய பாதிரியாரை 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வாயலூரில் பாதிரியார் சார்லஸ் என்பவர் 30-க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை வைத்து சிறுவர் காப்பகம் நடத்தி வருகிறார். இவரது காப்பகத்தில் இருந்த 17 வயது சிறுமியை சார்லஸ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் உறவினர் மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த சார்லஸை தீவிரமாக தேடி வந்தனர்.
சுமார் 1 1/2 ஆண்டுகளுக்கு பிறகு கோயம்பேட்டில் இருக்கும் ஒரு இடத்தில் சார்லஸ் பதுங்கி இருப்பதாக மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற சார்லஸை சுற்றி வளைத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தற்போது அந்த சிறுமிக்கு 2 1/2 வயதில் குழந்தை இருக்கிறது. அவர் சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.