ஈரோடு மாவட்டத்திலுள்ள ரங்கம்பாளையம் பகுதியில் தீபக்குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தீபக்குமார் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் தீபக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளியே வந்த தீபக்குமார் அந்த சிறுமியை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததால் அவர் கர்ப்பமானார். கடந்த மாதம் சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் தீபக்குமாரை இரண்டாவது முறையாக போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Categories