Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சிறுமிக்கு பூ வாங்கி கொடுத்து வேலையை காட்டிய வாலிபர்” அதிரடியாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி….!!!!

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு  5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள  ஊமாரெட்டியூரை பகுதியில் கூலி தொழிலாளியான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வரும் 9 வயது சிறுமிக்கு கடந்த 2020-ஆம் ஆண்டு மே மாதம் பூ வாங்கி கொடுத்து ஆள்  நடமாட்டம் இல்லாத விவசாய தோட்டத்திற்கு   அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சதீஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஆனால் ஜாமீனில் வெளிவந்து சதீஷ்குமார் தலைமறைவாகி விட்டார்.

இதனையடுத்து கடந்த 20-ஆம் தேதி காவல்துறையினர் சதீஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற நீதிபதி மாலதி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சதீஷ்குமாருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம்  சிறை தண்டனை என  அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மாத காலத்திற்குள் 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியை வழங்க வேண்டும்  என அவர் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார்.

Categories

Tech |