சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி மானத்தால் ஓலைப்பட்டி பகுதியில் அர்ஜுனன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார்.இந்நிலையில் அர்ஜுனன் அதே பகுதியில் வசிக்கும் ஆறாம் வகுப்பு மாணவியிடம் 100 ரூபாயை கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் அர்ஜுனனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.