Categories
தேசிய செய்திகள்

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சித்தப்பா….!! பெற்றோர் அதிர்ச்சி…..

புதுச்சேரியில் அண்ணன் மகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். 27 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் தனது அண்ணன் குடும்பத்துடன் ஒன்றாக அந்த பகுதியில் வசித்து வருகிறார். ராஜ்குமாரின் அண்ணனுக்கு 14 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ராஜ்குமாரின் அண்ணன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் வேலைக்கு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றிருந்த சமயத்தில் ராஜ்குமார் தன்னுடைய அண்ணன் மகளின் கையைப் பிடித்து இழுத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோர் வந்தவுடன் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் ராஜ்குமாரின் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அந்த நபர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |