விருதுநகர் மாவட்டத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாதிரியாரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியில் செயல்பட்டுவரும் பெந்தகோஸ் சர்ச்சில் பாதிரியாராக உள்ள கிறிஸ்துதாஸ் என்பவர் அப்பகுதியில் உள்ள 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில் பாதிரியார் போக்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சினை காரணமாக சிறுமியின் தாய் மற்றும் மூன்று சகோதரர்கள் பாதிரியாரின் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
பாதிரியார் வீடு வீடாக சென்று ஜெபம் நடத்தி வருபவர். இந்நிலையில் அந்தக் குடும்பத்தினர் தனது வீட்டில் தஞ்சம் புகுந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாதிரியார் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி அவரது தாயிடம் தெரிவிக்கவே, அதிர்ந்து போன தாய் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். பின்னர் அவரை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ கிளையில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.