மதுரையில் மூதாட்டி சிறுமியிடமிருந்த தங்க தாயத்தை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தானில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் இருந்த சிறுமியிடமிருந்து மூதாட்டி தங்க தாயத்தை திருடி சென்றார். இச்சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் கோவிலில் மாட்டி வைத்திருந்த சி.சி.டி.வி கேமராவில் பார்த்தபோது மூதாட்டி தங்கத்தை திருடிய சம்பவம் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலில் பணிபுரிவோர் மூதாட்டியை கண்டுபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.