சிறுமியின் ஆபாச புகைப்படங்களை பதிவிறக்கம் செய்த நபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு ஒரு புகார் வந்தது. அந்த புகாரில் மதுரையில் வசிக்கும் ஒருவர் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அதனை மற்றவர்களுக்கு பகிர்ந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின்படி காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மீனாட்சி நகரில் வசிக்கும் ஆனந்த் என்பவர் சிறுமியின் புகைப்படங்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆனந்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.